Tuesday, 29 June 2021

தமிழரின் மதம் இந்து மதம் மட்டுமே

 இந்து மதம் யார் மதம்? தமிழன் யார் கலாச்சாரம்  என்ன ஆரியர்களின் மதமா??தமிழர்களின் மதமா???


1.ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளும், கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மருங்கூர் பட்டிணத்து கல்வெட்டுகளும் ஏராளம் கிடைத்துள்ளது. அவை அனைத்தும் பழைய காலத்து தமிழும் இந்து சமய கடவுள் உருவங்களும் பொறித்து காணப்படுகின்றது.


2.இன்று ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்த ஹாரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பழைய நகரங்களில் தமிழர்களின் வாழ்வியலும் இந்துக்களின் கடவுள் சிலைகளும்தான் கிடைத்திருக்கின்றன.


3.‘‘இறையனார் அகப்பொருள் உரை’’ என்ற நூலில் முருகன்தான் தமிழ்மொழியின் மூலங்களை உருவாக்கினான் என்றும் அதனை அகத்தியன் மூலம் இலக்கணம் வகுத்து கொடுத்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.


4.பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்க்க மூன்று சங்கங்கள் அமைத்தனர். அந்த சங்கங்களில் சிவனும் முருகனும் தமிழ் புலவர்களாகவே இருந்து அழகுபடுத்தினர்.


5.இன்று நமக்கு கிடைத்த பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் ‘‘மாயோன் மேய காடுறை உலகமும்’’ என்னும் நூற்பாவில் திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி போன்றவை கடவுள்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த காலகட்டத்தில் இந்து சமய கடவுள்களை தவிர வேறு கடவுள்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.


6.மூன்றுவாது தமிழ் சங்கத்தில் எட்டுத்தொகை என்னும் பாட்டு வகையில் உள்ள குறுந்தொகையில் ‘‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’’ என்கின்ற பாட்டு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டு என்று சிவபெருமானால் எழுதப்பட்டு தருமியிடம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.இந்த பாட்டின் கீழே எழுதியவர் இறையனார் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


7."கடவுள் மறுப்பு" என்பது ஈ.வெ.ரா பிறப்பதற்கு முன்பு எந்த தமிழ் இலக்கியத்திலும்இல்லை.


8."சமணர்கள்" என்னும் வெளி மதத்தினர் வெளி மொழியினர் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களாக தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.ஆயினும் சமணர்கள் தங்கள் மதத்தைத் தொடங்கிய "மகாவீரரையே" கடவுளாக ஏற்றுக் கொண்டனர். சமண மதம் தமிழர்கள் மதம் அல்ல.


9.சிவனையும் முருகனையும் வழிபடும் தமிழ் மரபு ஆதிசங்கரரால் "சைவம்" என்ற பெயர் பெற்றது.


10.அதேபோல தமிழகத்தின் முல்லை நிலத்தில் உள்ள திருமால், சங்க இலக்கியங்களான பரிபாடல், ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் தொடர்ந்து சிறப்பித்து பாடப்பட்டுள்ளார்.


11.இந்த திருமாலின் மூல மந்திரமான "நாராயணன்" என்பது தமிழ் வார்த்தையாகும்.இந்தியாவில் எந்த மொழிக்காரராக இருந்தாலும் தமிழில் உள்ள "நாராயணன்" என்னும் மூல மந்திரத்தையே சொல்லுகின்றார்கள் என்று தேவநேய பாவாணர் தமது தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.


12.திருமாலை வணங்கும் சமயம் பரிபாடலில் மாலியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஆதிசங்கரரால் அது "வைணவம்" என்று பெயர் பெற்றது.உலகில் முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியை ஏற்றுக் கொண்ட ஒரே மதம் இந்து மதம். இந்து மத தமிழ் கடவுள்கள் பெயர்கள் சிவன், முருகன், திருமால், இந்திரன், வர்ணன், காளி என்பதாகும்.


"இந்து மதம் தமிழரின் மதம் அல்ல..இந்துவாக இருப்பவன் தமிழன் அல்ல..." என்று குரைத்துக்கொண்டு திரியும் நாய்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Thursday, 18 February 2021

பாதிரி படை

 இந்தியாவில் கிறிஸ்தவத்தை ஏன் முழுமையாகத் தடை செய்ய வேண்டும்?


எல்லா நாட்டு அரசாங்கங்களிடமும் மூன்று வகையான படைகள் மட்டுமே உண்டு; 


ஆனால், ,ஐரோப்பிய நாடுகளிடம் நான்கு  வகையான படைகள் உண்டு;அவை:1.தரைப்படை 2.விமானப் படை 3.கப்பற் படை 4.பாதிரிப் படை


போர் என்று வந்தால் ஒரு நாட்டின் தரைப்படை,விமானப் படை,கப்பற்படை என்று மூன்றுவிதமான ராணுவம் மட்டுமே இன்னொரு நாட்டின் நிலப்பகுதி,மக்களைத் தாக்கும்;


ஆனால்,பாதிரிப் படை போர் நடைபெறும் காலம் தவிர, எல்லா காலத்திலும் இயங்கும் ஐந்தாம் படை;


இந்த ஐந்தாம் படையின் செயல்பாடுகளால் ஒரு நாட்டின் பாரம்பரியம் நிர்மூலமாக்கப்படும்;அதன் செல்வ வளம் எவருக்கும் தெரியாமல் கொள்ளையடிக்கப்படும்;அந்த நாட்டின் தேசபக்தி சிதறடிக்கப்படும்;அந்த நாட்டு மக்களின் சகோதரத்துவமும்,ஒற்றுமையும் நாசமாக்கப்படும்;தேசத் துரோகிகள் கொண்ட ஒரு தலைமுறையையே பாதிரிப் படை உருவாக்கிக் கொண்டு இருக்கும்;ஆனால்,அந்த நாட்டு அரசாங்கமும்,மக்களும் தமது மதம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால்,அவர்கள் அழிந்தே போவார்கள்:


இன்றைய அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை;சோவியத் ரஷ்யா முதல் தென் ஆப்ரிக்கா வரையிலான பெரும்பாலான நாகரீகங்கள் அழிந்தது இந்த பாதிரியார் படையால் தான்!

அமெரிக்காவில் செவ்விந்தியர்களின் நாகரீகம் இன்று அருங்காட்சியகத்தில் மட்டுமே இருக்கின்றது;

தென் அமெரிக்காவின் மயன் நாகரீகம் காணாமல் போய்விட்டது;


ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகள் இன்று காட்டுமிராண்டிகளாக நடத்தப்படுகின்றார்கள்;அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன;அந்த பூர்வகுடிகளில் பெரும்பாலானவர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு,தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்ட சோழர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை;அவர்கள் இன்று வரையிலும் தமிழ் மொழியைத்தான்  பேசி வருகின்றார்கள்:


உலக நாடுகள் அனைத்திற்கும் வழிகாட்டும் ஆன்மீகக் கருத்துக்கள்,அரசியல் கருத்துக்கள்,நாட்டு நிர்வாகக் கருத்துக்கள்,மருத்துவ அனுபவக் குறிப்புகள்,மனிதனை இறை சக்தியுடன் இணைக்கும் கருத்துக்கள் மற்றும் வழிமுறைகள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே இருக்கின்றன;இதை 1700 களிலேயே இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் உணர்ந்து கொண்டார்கள்;


ஒரு பக்கம் இந்து மதம் பற்றி ஆராய்ச்சி செய்வது;மறுபக்கம் அந்த ஆராய்ச்சிகளின் முடிவால்,இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருக்கும் கோவில்,பெண் இனம்,விவசாயம்,பசு இவைகளை அழிப்பது அல்லது இவைகளின் பெருமைகளை அழிப்பது அல்லது இவைகளின் பெருமைகளை இந்துக்கள் அறியவிடாமல் தடுப்பது;


இன்றைய மேற்கு வங்காளத்தில் மட்டும் அன்றைய ராபர்ட் க்ளைவ் சுருட்டிய தங்கம் மட்டும் எவ்வளவு தெரியுமா? 3,00,000 கோடி பவுன் தங்கம்!!! அப்போ,300 ஆண்டுகளில் எத்தனை கோடி டன் தங்கத்தை கிறிஸ்தவ இங்கிலாந்து கொள்ளை அடித்திருக்கும்?


இன்று இந்தியாவில் குருகுலக் கல்வி இல்லை;ஆனால்,கிறிஸ்தவ இங்கிலாந்தில் குருகுலக் கல்வி மட்டுமே இருக்கின்றது;அதன் மூலமாக,தேச பக்தியும்,ஆளுமைத்திறனும் கொண்ட இளைய சமுதாயம் உருவாகிக் கொண்டே இருக்கின்றது;


மெக்காலே கல்வித்திட்டத்தை நமது பாரத நாடு முழுவதும் கொண்டு வந்தது இதனால் தான்;அதனாலும் கூட,நமது பண்பாட்டை அசைக்க முடியவில்லை;ஆங்கில வழிக் கல்விதான் தரமான கல்வி என்று எல்லோரையும் நம்பவைத்து,தெருவுக்கு ஒரு ஆங்கில வழிக் கல்வி வந்த பின்னர் தான் நமது பண்பாட்டில் இருந்து இளைய இந்துக்கள் வெகு தூரம் போய்விட்டார்கள்;


20,00,000 ஆண்டுகளாக மகத்தான செல்வ வளம் உள்ள முதல் நாடாக நமது பாரதம் இருந்தது;இரண்டாவது நாடாக நமது பங்காளி சீனா இருந்தது;செல்வச் செழிப்பு இருந்ததால் தான் ஐரோப்பிய நாடுகள்,நமது நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொள்ள துடித்தார்கள்;கடல் வழி பாதையைத் தேடி உலகம் முழுவதும் இருக்கும்  எல்லா கடல்களிலும் அலைந்தார்கள்;


1800 களில் பாதிரியார்கள் படை பாரதம் முழுவதும் செயல்படத் துவங்கினார்கள்;ஒரே ஒரு பாதிரியார் தனது டைரிக் குறிப்பில் எழுதியுள்ளார்;அப்போது அவர்களின் எண்ணிக்கை சில நூறு பேர்கள் தான்!


“நான் 12 ஆண்டுகளாக தினமும் இயேசு கிறிஸ்து பற்றி இந்து மக்களிடம் போதனை செய்து கொண்டே இருந்தேன்;இன்று 12 ஆண்டுகள்,17 நாட்கள் ஆகின்றது;இன்று தான் ஒரு இந்து,கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதாக மனம் மாறியிருக்கின்றான்;எனது உழைப்பு வீண் போகவில்லை”


இந்தியாவின் சுதந்திரத்திற்கு இந்துக்களும்,இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து தான் போராடினார்கள்;இது கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு கிலியை உருவாக்கியது;1930 முதல் இந்துக்களையும்,இஸ்லாமியர்களையும் பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்யத் துவங்கினான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;

அதே சமயம்,ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இந்திய சுதந்திரத்திற்கு போராடவில்லை;பிரித்து ஆளும் சூழ்ச்சியால் தான்  பாகிஸ்தானாக உருவாகி இன்று வரையிலும்  நமது வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கின்றது;


இன்று 2018 இல் தெருவுக்கு ஒரு பாதிரி இருக்கின்றான்;சாதி மோதல்கள் வருவதற்கு பாதிரியார்களின் நயவஞ்சகம் தான் காரணம் என்பதை வேணுகோபால் கமிஷன் தனது ஆய்வு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கின்றது;மண்டைக்காடு கலவரத்திற்குக் பிறகு,தமிழ்நாடு அரசு உருவாக்கிய வேணுகோபால் கமிஷனின் ஆய்வு முடிவுகளில் இதுவும் ஒன்று;


அரசுத்துறைகளில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள் ஒரு போதும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பதில்லை;உதாரணமாக,ஒரு நகரத்தின் மின் வாரிய தலைமை அதிகாரியான ஈ.ஈ; அல்லது ஜே ஈ வாக ஒரு கிறிஸ்தவன் ஆகும் போது,அவனது/அவளது பதவிக் காலம் முழுவதும் ஒரவஞ்சனையாக மட்டுமே செயல்பட்டுவருகின்றான்;அவனது/அவளது அதிகாரத்திற்கு உட்பட்டு வரும் பகுதியில் இருந்து மின்சாரம் சார்ந்த புகார் ஒரு கோவிலில் இருந்து வந்தால் அதை மதிப்பது கிடையாது;அதே சமயம்,ஒரு புதிய சர்ச்சில் இருந்து புகார் வந்தால் உடனடியாக நேரில் சென்று தனது செல்வாக்கினால் சகலவசதிகளையும் செய்து கொடுப்பது வழக்கம்;


கோவில்கள் தான் இந்து மதத்தின் அடிப்படை ஆதாரமாக இருப்பதால்,கோவில் ஈ ஓ வாக பணிபுரிபவர்களை கிறிஸ்தவராக மதம் மாற்றுவதை திட்டமிட்டு செய்து வருகின்றார்கள்;அப்படி மதம் மாறினாலும்,அவர்கள் தமது இந்துப் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுவது வழக்கம்;அதன் மூலமாக அந்த கோவிலின் வழக்கமான ஆன்மீக நடைமுறைகள்,மரபுகள்,பூஜைகளைச் சீரழிக்கும் வேலை 1998 முதல் நடைபெற்றுவருகின்றன;


முத்தமிழை வித்தவர் 1998 களில் ஒரு பெரிய குழுவினரை அறநிலையத் துறையினுள் கோவில் ஈ ஓ க்களாக தேர்வு செய்து பணி நியமனம் செய்துள்ளான்;இவ்ர்களின் பெரும்பாலானவர்கள் நாத்திகவாதிகள்,கிறிஸ்தவர்கள் ஆவர்;இலுமுனாட்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று இது;இதன் பிறகு தான் சக்தி வாய்ந்த கோவில்களின் தெய்வீக சிலைகள்,தூண்கள்,உற்சவர்கள் திருடப்பட்டன;திருடப்பட்டு,ஐரோப்பாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பிவைக்கப்பட்டன;


பிரேமானந்தா சுவாமிகள் வழக்கில் பிரேமானந்தாவின் மீது எந்தவித தவறும் இல்லை என்று தெரிந்தும் அவர் குற்றவாளியாக ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்குக் காரணம் தீர்ப்பு சொன்ன பெண் நீதிபதி க்ரிப்டோ கிறிஸ்தவர் என்பதால் தான்;(க்ரிப்டோ கிறிஸ்தவர் என்றால் இந்துப் பெயரைக் கொண்டு வாழ்வது;மறைமுகமாக கிறிஸ்தவராக இருப்பது)


பி சி அலக்சாண்டர் தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருந்த போது ஒரு வாய்மொழி உத்தரவு தமிழ்நாடு முழுவதும் இடப்பட்டது;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் ஆகும்;இதை நினைவூட்டும் விதமாக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இதன் படமானது போட்டோவாகவும்,டேபிள் வெயிட்டாகவும்,மரத்தால் செய்யப்பட்ட வடிவங்களாகவும் இருந்தன;இவைகள் அனைத்தையும் பி சி அலெக்சாண்டர் எடுத்து குப்பைத் தொட்டியில் போடும்படி அந்த வாய்மொழி உத்தரவு வந்தது;


கன்னியாக்குமரியில் ஒவ்வொரு பாதிரியாரும் ஒரு நாளுக்கு ஒரு இந்துவையாவது கிறிஸ்தவராக மதம் மாற்றுவது என்ற வெறியில் செயல்பட்டு வருகின்றான்;அப்படி என்றாவது ஒரு நாள் ஒரு இந்துவை மதம் மாற்றிட முடியாத பட்சத்தில் மறு நாள் முதல் ஒரு வேளை உணவு உண்பதை நிறுத்தும் வழக்கம் இருக்கின்றது;


மண்டைக்காடு கலவரம் 1982 வாக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் தூண்டிவிட்டார்கள்;அதன் முடிவாக,தமிழக அரசாங்கத்திடம் அதிகப்படியான சலுகைகளைப் பெற்றார்கள்:


ஒரிஸ்ஸா பூரி ஜெகன்னாதர் திருக்கோவிலில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அவர்களுடைய தட்டில் விழும் காணிக்கைகளை அவர்களே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் தந்திரமாக நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளார்கள்;இதன் மூலமாக,அந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவதை படிப்படியாகக் குறைத்துவிடவும் முடியும்;சில பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த கோவிலையே இழுத்துப் பூட்டவும் முடியும்;


கர்னாடக மாநிலத்தில் வைஷ்ணவர்களையும்,சைவர்களையும் பிரிக்க கிறிஸ்தவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்;அதன் படி,சைவ சமயத்தைப் பின்பற்றும் கர்னாடக மாநில மக்களுக்கு லிங்காயத்துகள் என்று பெயர்;அந்த லிங்காயத்துக்களை கர்னாடக  மாநில காங்கிரஸ் கட்சியானது,தனது  மாநில ஆட்சிக்காலத்தில் தனி மதமாக அங்கீகரித்தது;இந்த அங்கீகாரத்திற்கு பாராட்டு தெரிவித்து அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ கவுன்சில் ,கர்னாடக மாநில முதல்வர் சீதாராமைய்யாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது;இதன் மூலமாக,தங்களுடைய மதம் மாற்றச் செயல்களுக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது;


அட்லி என்ற கிறிஸ்தவ வெறியன்,ஜோசப்பை வைத்து ஒரு திரைப்படம் இயக்கினான்;அதில்,இந்துத் திருமணம் ஒன்று நடைபெறுகின்றது;ஜோசப் தனது காதலியின் மீதான வெறியினால்,மண மேடையில் மணப்பெண்ணைக் கட்டிப்பிடிக்கிறான்;பிறகு,சுய நினைவு வந்து விலகிச் செல்கின்றான்;அதைப் பெருந்தன்மையோடு இந்து மணமகன் ஏற்றுக் கொள்கின்றான்;இந்துக்களாகிய நாமோ அட்லியை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கின்றோம்.(சர்ச்சில் திருமணம் நடைபெறுவதாகவும்,அதில் இப்படி ஒரு காட்சியை எந்த ஒரு கிறிஸ்தவனாவது வைக்க முடியுமா? வைத்தால்,ஐரோப்பாவில் இருந்து ரகசிய பண உதவி தான் கிடைக்குமா?)


கேரளாவில் கன்னியாஸ்திரிகள் 400 பேர்கள் இணைந்து தம்மை கன்னியாஸ்திரியாக சேவை செய்த காலத்தில் பாதிரியார்கள் கற்பழித்தார்கள்;அதற்கு நீதி வேண்டும் என்று ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளார்கள்;அந்த சங்கத்திற்கு யாரும் ஆதரவு தரவில்லை;

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக இந்து தர்மத்தை திட்டமிட்டு அழிக்கும் வேலை 300 ஆண்டுகளாக நடபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


நமது இந்தியாவில் இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக,அதிகமான சொத்துக்கள் இருப்பது கிறிஸ்தவ மிஷநரிகளுக்குத் தான்!


2014 வரை உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்குரிய பணத்தின் மதிப்பை வைத்து என்ன செய்யலாம் தெரியுமா?


100 கோடி இந்துக்கள் ஒவ்வொருவரும் ரூ.5 கோடி பெற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மதம் மாறும் அளவுக்கு குவிந்திருக்கின்றது;


இவர்கள் பள்ளி,கல்லூரி,மருத்துவமனை,அறக்கட்டளை நடத்துவதே சேவை செய்வதற்காக அல்ல;மதம் மாற்றுவதற்காகவே! 


தெரஸா வெளிப்படையாக சொன்னதும் இதையே தான்;இந்து மதத்தைச் செல்லரிக்க வைத்த தெரஸாவை நாம் இன்றும் அன்னை தெரஸா என்று ஆராதிக்கின்றோம்;


1998 இல் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்தோம்;இதை அமெரிக்க அரசாங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது;மறுநாளே அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ கவுன்சிலும் நமது அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையை கண்டித்து அறிக்கை விட்டது;


உலகம் முழுவதும் கிறிஸ்தவம்,இஸ்லாம்,கம்யூனிஸம்,நாத்திகம் ஒன்றுக்கு ஒன்று எதிரிகளாகத் தான் செயல்பட்டு வருகின்றன;ஆனால்,உலகின் ஆதி மதமும்,விஞ்ஞான மதமுமான இந்து தர்மத்தை அழிக்க இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருக்கின்றன;


வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை முறையாகச் செலவு செய்யாமல்,மத மாற்றத்திற்கு செலவு செய்து வந்தன கிறிஸ்தவ என் ஜி ஓக்கள்;அதை சட்டப்படி தடுத்து நிறுத்தினார் நமது சுதேசி சிந்தனைகள் கொண்ட பிரதமர் மோடி அவர்கள்!!!


ஒரே நேரத்தில் ஐந்து பாகிஸ்தான்களுடன் போரிட்டுக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் நாடு,தன்னை யூத மத நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது;


இந்துக்கள் மட்டும் வாழும் நாடாக நமது பாரத நாட்டை ஆக்குவது எப்போது?


தீராத தொல்லைகளையும்,தேசவிரோதச் செயல்களையும் ஐரோப்பியர்களின் பக்கபலத்தால் பாரத நாட்டில் செயல்படுத்தி,நமது சனாதன தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தை தடை செய்யப் போவது எப்போது?

Tuesday, 16 February 2021

தமிழும் கிறிஸ்தவமும்

 தொல்காப்பியம் தோன்றிது  9000 வருடங்களுக்கு மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றி 5000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூல்களை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


திருக்குறள் தோன்றி 2000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


முட்டாள்களே. சிந்திக்கும் திறனற்ற மூடர்களே. பதில் கூறமுடியுமா. 200 வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில அந்நிய கிருஸ்தவன் பாதுகாத்தானா?

Sunday, 24 January 2021

இந்து பெயர் உருவான விதம்

 #இந்து என்ற பெயர் எப்போது வந்தது? தொல்லியல் மற்றும் #தமிழ் இலக்கியங்களின் பார்வை என்ன?


ஹிந்து (இந்து) என்ற வார்த்தையே 200 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் ஜோன்ஸ் தான் தந்தார் என்று இங்கு பரவலாக பேசி வருகின்றனர். இதை சில இந்துத்துவவாதிகளும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உண்மையா? தொடர்ந்து படியுங்கள்...!


பாரத மக்களை #இந்துக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே  இருந்தது. இதற்கு சான்றாக காலத்தால் முந்தைய #கல்வெட்டு இன்றிலிருந்து  2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது...!


ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/DNa_inscription


இதுதான் இன்று நமக்கு கிடைக்கும் காலத்தால் முந்தைய #இந்து என்ற சொல்லாடலுக்கு #தொல்லியல் சான்று. இது தவிர்த்து இதற்கு வேறு என்னென்ன சான்றுகள் உள்ளன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்....!


அடுத்ததாக இஸ்லாமிய அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான #தாரிக்_அல்_ஹிந்த் எனும் நூலில் முக்கியமாக இந்நூல் எழுதப்பட்ட காலமான 1030 களில் இந்தியாவில் இருந்த தத்துவ மரபிற்கு அவர் #ஹிந்து என்று பெயரிட்டு எழுதி உள்ளார். அதாகப்பட்டது 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்....!


அதோடு கி பி 5 ஆம் நுற்றாண்டில் #பூலாங்குறிச்சி  தமிழ்(வட்டெழுத்து) கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது. அநேகமாய் இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் #கல்வெட்டும் பதிவாக இருக்கும். என்றாலும் இதை ஏற்பதில் பல குளறுபடிகள் உண்டு. ஏனென்றால்  இதை பிரித்து எழுதியதை தவறாக புரிந்துகொண்டனர் என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆக இதை சற்று ஒதுக்கி வைக்கலாம்...!


#ஆதாரம் ;


http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm


ஹிந்து" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று #சிவபெருமான் அருளிய விளக்கமாக நண்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் பதிவு செய்ததாவது👇👇


"ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து"


அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே " ஹிந்து. "


 #ஆதாரம் : மேரு தந்த்ரம்  

(31 வது அத்யாயம் )


இதை தவிர " ஹிந்து " என்ற சொல் காளிகா புராணம், பவிஷ்ய புராணம், ப்ருஹந்நாரதீய புராணம், குலார்ணவ தந்த்ரம்  முதலிய பழமையான நூல்களில் "ஹிந்து" என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரித்ர ஆய்வாளர்கள் மேரு தந்த்ரம்  என்ற நூலின் காலமாக எட்டாம் நூற்றாண்டை சார்ந்த நூல் என்று கூறுகிறார்கள்....!


அதோடு தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது #விஜய_நகர_சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில்,

“#ஹிந்து_ராய_ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது......! 


ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் #ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த #ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “#ஹிந்துஸ்தான்_பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் #சத்ரபதி_சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது.....!


”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் #கவிராஜ_பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே #ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது......!


#பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது. ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன....!


மிக முக்கியமாக #பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை #இந்து_ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார்....!


“இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “#இந்துஞானிகள்” என்றார்..!


 (இது ஜடாயு அவர்கள் எழுதிய தமிழ் ஹிந்து எனும் தளத்திலிருந்து.)


வடமொழியில் எழுதப்பட்ட #பிரகாஸ்பதி_ஆகமத்தில் (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .

தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே" என்ற வரிகள் உண்டு.


அதாவது “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது....!


அடுத்து #புத்த_ஸ்ம்ருதி (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிம்ஸாயா தூயதே  யஷ்ச ஸதாசரண தத்பர:

வேத, கோ, ப்ரதிமா  ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"


“ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து என்கிறது”.....!


மேலும், கிறிஸ்தவ மத நூலான பைபிள்  பழைய ஏற்பாட்டில் பாரதத்தை #இந்து_தேசம் என்று சுட்டும் குறிப்புகள் உள்ளது .....!


"இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள" 


#பைபிள்_பழைய_ஏற்பாடு_எஸ்தர் : 1-1


ஆதாரம் : https://www.bible.com/ta/bible/339/EST.1.1-4.TAMILOV-BSI


இது மட்டுமில்லாது தமிழ் #இலக்கியங்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு. ஆனால் இது இடத்தையோ மதத்தையோ குறிக்க பயன்படுத்தப்படாமல் மரபை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ,


கி. பி 12 ஆம் நுற்றாண்டு #ஒட்டக்கூத்தர் இயற்றிய #குலோத்துங்க_சோழன்_உலாவில், குலோத்துங்க சோழனை "பொன் துவரை மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ” 


பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள்....!


இங்கு இந்து என்ற சொல்லாடல் #சந்திர_மரபு என்ற பதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது...!


இது மட்டுமல்லாது இதே பதத்தில் #திருமந்திரம், #தேவாரம், #திருவாசகம், #கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு....!


ஆக தமிழ் இலக்கியங்களிலேயே இந்து என்ற சொல்லாடல் பயின்று வந்துள்ளதால் ஆங்கிலேயன் தான் இந்து என்று பெயரிட்டான் என்ற கூற்று #ஒவ்வாததாகிறது. இவ்வாறு, பொ.மு 500 தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது  இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு பரவி இருந்தது என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறியலாம்....!


Sunday, 10 January 2021

 _*ஹிந்து சகோதரர்களே*_ _பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._ _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._ _மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_ _ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ _நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_ _ஆகையால் உங்களால் முடிந்த பங்களிப்பு_ _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_ _நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._ _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_ _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_ _தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ _*ஜெய் ஸ்ரீ ராம்*_ https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

ராமர் கோவில் கட்ட நிதி தாருங்கள்

 _*ஹிந்து சகோதரர்களே*_


_பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._


 _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._


_மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_


_ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ 


_நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_


 _ஆகையால் உங்களால் முடிந்த  பங்களிப்பு_


 _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_


_நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._


 _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_


 _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_


_தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ 


_*ஜெய் ஸ்ரீ ராம்*_



https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

Thursday, 7 January 2021

பொங்கல் பண்டிகை இந்துகள் பண்டிகை அல்ல

 பொங்கல் தமிழர் பண்டிகை, இந்துகளுக்கு சொந்தமானது இல்லை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது என்று உருட்டுவானுங்க. 


ரிக்வேத காலத்தில் இயற்கையை தான் மக்கள் வணங்கினார்கள், அதே போல தான் தமிழர்களும் இயற்கையை வணங்கினார்கள். 


இயற்கைக்கு உயிர் கொடுத்து வந்தது தான் (நிலம், நீர், காற்று, ஆகாயம், சூரியன்)  நம்ம இந்து கடவுள்கள். ( எ-கா) 

👉 நிலம் - பூமிதாய் , 👉நீர் - வருண பகவான் , கங்கை, 

👉காற்று - வாயு பகவான் 

👉சூரியன் - சூரிய பகவான், அக்னி நாயகன், திரௌபதி, தீபமாக சிவன்(திருவண்ணாமலை) 


இப்படி தான் இந்திய கலாச்சாரம் மனித நாகரீகம் வளர வளர அவர்களின் நம்பிக்கையும் ஆழமான இறை நம்பிக்கையை நோக்கி நகர்ந்தது. 


கவனிக்கவும், 


முதல் நாள் பொங்கலுக்கு நாம சூரியனுக்கு படையலிட்டு வணங்குவோம்,

ஆனால் ஒரு சமுதாயத்தினர் ஒருவனை தவிர யாருக்கும் வணங்க மாட்டோம், அஞ்ச மாட்டோம் ,அவனை வணங்காதவர்கள் காபிர்கள் அவர்கள் மீது புனிதப் போர் நடத்துங்கள் என்கிறது, இன்னொரு குரூப் இயேசுவை தவிர்த்து மற்றதை வணங்கினால் அவர்கள் பாவிகள், அவர்களு நிச்சயம் நரகம் தான் என்கிறது. 


இவர்கள் தமிழர்களா? 


பொங்கலுக்கு இரண்டாம் நாள் மாட்டு பொங்கல்,  மாடுகளை தமிழர்கள் தெய்வங்களாக அன்று பூஜை செய்து வணங்குவார்கள், ஆனால்   நாங்க மாடு கறி தின்போம், அது என் உரிமை என்று மேலே சொன்ன இரண்டு குரூப்பும் கூடவே புரட்சி புளுத்திகள் போராட்டம் நடத்தினாங்க, இவங்க தான் தமிழர்களா? 


மறுபடியும் சொல்ரேன்  நம்மை சுற்றி பெரிய மாய வலை இருக்கு அதன் வலு தன்மை திக, திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற தீயசக்திகளை சார்ந்து இருக்கிறது. 


நீ பெரும்பான்மையாக இருக்கும்வரை மட்டுமே உன்னால் அந்த தெருவில் கூட நடமாட முடியும். உன்னை ஏமாற்ற நாம் தமிழர்கள் என்று கூவும் கூட்டம் தமிழ்மொழியில் கூட பெயர் வைக்காது, தமிழ் பாடம் படிப்பது ஹராம் என்று போராடும் கூட்டம் அது. உணர்ந்து உஷராகிடு. 

Sunday, 29 November 2020

சைவ மதமும்...சமஸ்கிருத மொழியும்.....

 சைவ மதமும்...

சமஸ்கிருத மொழியும்....


சைவ சமயம் என்பது சிவனை முழுமுதற் தெய்வமாக போற்றுவது. ஆனால் நாம் பல்வேறு தெய்வ மூர்த்தங்களையும் வழிபடும் பண்பு உடையவர்கள். கணபதி முருகன் சக்தி விஷ்ணு நவக்கிரகம் என்று விரிவடைந்து செல்கிறது. தவறில்லை. நாயன்மார்களும் சித்தாந்திகளும் பல் தெய்வ வழிபாடு பற்றிப் பாடியுள்ளனர் காரணம் எமது வழிபாட்டு நேரம் அதிகரிக்கிறது. ஆத்ம சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு எல்லாத் தெய்வங்களையும் போற்றுபவர்கள் இந்துக்கள் ஆனார்கள்.

பின்பு பொதுவாக இந்து சமயம் எனப் போற்றுகிறார்கள் இந்துப்பண்பாடு இந்து நாகரிகம் இந்து கலாச்சாரம் என்றும் இந்து அறநிலையத்துறை, இந்து கலாச்சார அமைச்சு, இந்து இளைஞர் சங்கம் என அமைப்புக்களும் தோன்றின.

ஒரு சிலர் இந்து என்ற வார்த்தைக்கு குறை கூறினாலும் பொதுவாக தனிச் சைவம் என்பது குறைவுதான் தனிச்சிவன் மட்டும் உள்ள ஆலயங்கள் இல்லை. மேலும் அபிராமி ஆதிபராசக்தி ஆஞ்சநேயர் ஐயப்பன் என்று பல வழிபாடுகளும் பரந்து வரும் வேளையில் நாம் இந்து என்று பொதுவாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சைவரும் ஹிந்து என்கிறார்கள் வைஷ்ணவரும் ஹிந்து என்கிறார் .சைவமா? இந்துவா? வடமொழியா? தென்மொழியா? ஆரியமா?திராவிடமா?என்ற கருத்து மாறுபாடு வேறுபாடு உடன்பாடு முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கிடைத்த ஞானநூல்கள் வாயிலாகவும் ஞானிகள் ஆன்றோர்கள் வாயிலாகவும் சில உண்மைகளைக் காண்பதே நமது நிலைப்பாடு .எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம் பிரிவுபடுவதை விடுவோம். அளவில்லாமல் எல்லா இடமும் பெருகட்டும் பிளவில்லாமல் ஒற்றுமையாக இருக்கட்டும்.

சைவசமயம் போற்றும் சிவன் பல்வேறு மொழி பேசும் மக்களால் வழிபடப்படுகிறார் என்பதும் நாம் காண்கிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மொரீசியஸ், கன்னடம் இவ்வாறு பல உண்டு. எல்லாரும் நமசிவாய என்கிறார்கள். இது தமிழ் என்கிறார்கள் ஒருசிலர் ஆனால் போற்றி ஓம் நமச்சிவாய என்கிறார்கள். இங்கு ச் என்ற எழுத்து கூட சேர்க்கப்பட்டு ஐந்தெழுத்து அதாவது பஞ்சாச்சரம் ஆறேழுத்தாகி விடுகிறது.

பொதுவாக தமிழ் உச்சரிப்பில் நமசிவாய நமச்சிவாய என வந்துவிட்டது. உதாரணமாக நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இங்கு வடமொழி தென்மொழி இணைப்பை மணிவாசகரே ஆரம்பிக்கிறார். சைவ சமயத்தில் ஆரிய வேறுபாடே கிடையாது என்பதை பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே என்று சிவனைக் கூறுகிறார்.

இங்கு ஆரிய என்பது உயர்ந்த போற்றுதலுக்குரிய என்னும்பொருளில் வரும். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்பது அப்பர் வாக்கு.நாயன்மார்களுக்கு இல்லாத வெறுப்பு நமக்கு ஏன் ஆரிய வெறுப்பு வருகிறது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி இங்கு ஆதி அந்தம் வடமொழியில் தானே விழித்தார் .இறைமொழியை நாம் அழிக்கலாமா? கழிக்கலாமா? பழிக்கலாமா?

சிவபுராணத்தில் வரும் நாதன் என்றால் தலைவன் என்று பொருள்..நமஹ என்பது வடமொழி அதன் பொருள் போற்றுகிறோம் வணங்குகிறோம் சிவாய என்றால் சிவனுக்கு என்ற கருத்தாகும் நமசிவாய என்றால் அது

வடமொழி சிவனுக்கு வணக்கம் என்பதே இதன் பொருள்.வடமொழி இலக்கணத்தின் படி சிவாய என்பது நான்காம் வேற்றுமை ஒருமை., சிவாயநம என்றும் பஞ்சாட்சரத்தைசொல்லலாம் திருவருட்பயன் சொல்லுகிறது.

ஸ்தூல பஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாட்சரம் என்றவகை வடமொழி நூல்களில் உண்டு இதன் அடிப்படையில் சித்தாந்த சாஸ்திரங்களும் எடுத்தியம்புகின்றன. எனவே நமசிவாய வடமொழி என்பது நிரூபணமாகிறது. நமசிவாய ஒன்றை வைத்தே எமக்கேன் வேற்றுமை.

போற்றி ஓம் நமசிவாய என்றால் பஞ்சாட்சார மந்திரத்தைப் போற்றுவோம் என்று கூறுகிறார்கள் என மகிழலாம். நமசிவாய மட்டுமன்றி சரவணபவ என்பவர்களும் ஓம் சக்தி என்பவர்களும் உள்ளனர் மற்றும் வைஷ்ணவர்கள் ஓம் நமோ நாராயணாய என்பதும் நாம் அறிந்த வடமொழிச் சொற்களே ஆகும். திரியம்பகமந்திரம் காயத்ரி மந்திரம் தமிழர் அல்லாத பல சைவ அல்லது இந்து மக்கள் சொல்வதிலிருந்து சமஸ்கிருதத்தின் பரப்பு சைவத்தில் அதிகம் இருப்பதைக் காணலாம். எனவே வடமொழியை நாம் மதிக்க வேண்டும் மிதிக்கக் கூடாது.துதிக்க வேண்டும் அழிப்பதற்கு குதிக்கக் கூடாது.

சமஸ்கிருதம், வடமொழி, ஆரியம், சங்கதம் என்றெல்லாம் போற்றப்படும் மொழி சைவ சமயத்தில் மிக முக்கியமானது என்பதை நாம் ஆதார பூர்வமாகக் காணலாம் இன்று பல சமஸ்கிருத நூல்கள் மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. இணையத்தளங்களிலும் நிறைய உண்டு.. இருப்பினும் நம்மில் சில தமிழர் இது புரியாத மொழி என்று கூறுவதுதான் புரியவில்லை.

தமிழ் நூல்களிலும் சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. திருமுறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளை போன்றது. சிறு பிள்ளைகளுடன் நாம் கோவிப்பதில்லை அப்பிள்ளை அறிவு வர அரிசியில் இருந்து தான் சாதம் வரும் என்று

உணரும்.அதே போன்றுதான்வடமொழியை வெறுப்பவர்களுடன் நாமும் சினம் கொள்ளக் கூடாது. அவர்கள் திருமுறை படிக்கும் போது இறை அருளால் வடமொழியும் வரும்.

வேத உபநிடத புராண இதிகாச கருத்துக்கள் கதைகள் என்பன தமிழ் இலக்கிய நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் இறைவன் அருளால்ஆன்றோர்களும் நாயன்மார்களும். சந்தானாசாரியர்களாலும் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்தி வழங்கும் சொற்கள் வடமொழியாகவே உள்ளது. ஒருசிலவற்றை நாம் பார்தோமென்றால் விளங்கும். நீதி-அநீதி, நியாயம்-அநியாயம் ,கிரமம்-அக்கிரமம் சைவம் -அசைவம் இவ்வாறான எதிர்மறைச் சொற்களுக்கு வடமொழி இலக்கணம் உண்டு.

ஆன்றோர்கள் நாயன்மார்கள் வடமொழியை ஏற்று வடமொழிச் சொற்களும் கலந்து தமது ஞான நூல்களில் தந்துள்ளனர். சைவ சமய அல்லது இந்து சமய விடயம் பற்றிக் கூற வேண்டுமாயின் வடமொழி நூல் தொடர்பு கட்டாயம் இருக்கும் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்.

சைவத் திருமுறைகள் அருட் பாடல்கள் சித்தாந்தசாஸ்திரங்கள் வைணவ பிரபந்தங்கள் என்பவற்றின் தொகை ஏறத்தாழ ஐம்பதினாயிரம் பாடல்கள் என்று வைப்போம் ஆனால் வடமொழி நூல்களாகிய வேதங்கள் பிராமணங்கள் ஆரண்யம் உபநிடதங்கள் புராணங்கள் உப புராணங்கள் இதிகாசங்கள்(மகாபாரதம் ,ராமாயணம்) என்பவற்றின் தொகை சுமார் ஐந்து லட்சம் .இவையும் இறைவன் அருளால் ரிஷிகள் ஞானிகளுக்கு கிடைத்தனஎன்று ஏன் நாம் நம்புவதில்லை. இந்நூல்கள் இன்றும் நூலகங்களில் இணையத்தளங்களில் உள்ளன.பன்னிரு திருமுறைகள் மின்னம்பலத்தில் உள்ளது போல் சமஸ்கிருத நூல்களும் மின்னம்பலத்தில் உள்ளன. சமய ஆன்மீக நூல்களில் தொகையளவில் சமஸ்கிருத நூல்கள் அதிகம் என்பதை நாம் மறைக்க முடியாது. குறைக்க முடியாது.

தமிழுக்கு எப்படி தொல்காப்பியமோ அதேபோல் வடமொழிக்கு பாணினி என்பதை பரஞ்சோதி முனிவரின் பாட்டு ஒன்று தருவதைக் கவனிக்கலாம்..வடமொழியை பாணினிக்கு வகுத்து அருளி தொடர்புடைய தென்மொழியை உலகமெல்லாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் என்கிறார்.அடுத்து கண்ணுதற் கடவுளும் கழகமொடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் என்ற பாடல் வரியும் உண்டு எனவே தமிழ் பிரியர்கள் இவ் வரியை மாத்திரம் சொல்கிறார்கள், அதில் குறிப்பிடுவதுபோல் சில இலக்கண வரம்பிலாத மொழிகள் அழிந்துவிட்டன உண்மைதான் ஆனால் சமஸ்கிருதம் இறைவன் மொழி என்பதால் இன்றும் இலக்கண வளம்பெற்று பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உயிர் பெற்றுள்ளது அறிவோம்..உண்மைச் சைவர்களுக்கு வடமொழி தமிழ் மொழி இரண்டையும் மதிப்பவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

இரண்டும் சிவமொழியே ஆகும். எனவே வடமொழியை வெறுக்கக் கூடாது. வழிபாட்டில் இருந்து நறுக்க முடியாது.சைவத்திற்கும் சம்ஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்று மறுக்கக்கூடாது.

ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார்.

தமிழ்ச் சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே என்பது திருமந்திரம். இவ்வாறு பல வடமொழி மேன்மை திருமுறைகளில் ஏராளம் வந்துள்ளன. அத்துடன் வடமொழிச் சொற்கள் மிக அதிகம்.உள்ளன.

தொல்காப்பியத்தில் தற்சமம் தற்பவம் என்ற சிறப்பு வடமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.வடமொழிச் சொற்கள் தமிழ் சொற்கள் போன்று மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.உதாரணம் கமலம் பாதம் அரவிந்தம் காரணம் இப்படிப்பலஉண்டு. அடுத்து .வடமொழிச் சொற்களுக்கு ஏற்ப தமிழில் மாறி வருவது தற்பவம்.

உதாரணம் பங்கஜம் –பங்கயம் ஈஸ்வரன் –ஈச்சுரன் சரஸ்வதி –சரசுவதி எனவே தமிழ் பலம் நூலிலும் வடமொழிக்கு இடம் இருப்பதால்சைவத் தமிழர் அனைவரும் வடமொழியை அனுசரிக்க வேண்டும். எனவே வடமொழியை பதுக்க முடியாது, ஒதுக்க முடியாது என்பதை உணர்வோம்.

சங்க நூல்களில் மந்திரம் அந்தணர் வேதம் வேள்வி பார்ப்பனர் பற்றிய செய்திகள் நிறைய உண்டு. அக்கால சமூகத்திலும் அவர்களது தொடர்பு தேவை உள்ளது என்பதை இதுகாட்டுகிறது. அதிலும் சமய சம்பந்தமாக வரும்போது வடமொழி அவசியம் இருக்கும்.எடுத்துக்காட்டாக திருமுருகாற்றுப்படை மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே என்றும் மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் எனவும் பதிற்றுப்பத்தில் ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் எனவும் கூறப்பட்டுள்ளதுஇறைவனை ஆதி அந்தணன் என பரிபாடல் குறிப்பிடுகிறது.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ என்றும் அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் கூறப்படுகிறது.வள்ளுவரும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்றும் அறுதொழிலோர் என்றும் அந்தணர் தொடர்பான செய்திகளை கூறுகிறார். எனவே சைவ சமயம் வடமொழி அந்தணர்பல இடங்களில் பிரிக்க முடியாத முக்கூட்டுக் கலவையாக அமைவதை காணலாம். அத்துடன் புராணச் செய்திகள் இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் உண்டு உதாரணமாக சிலப்பதிகாரத்தில் திருமால் மூவுலகையும் ஈரடியால் அளந்த செய்தி உண்டு.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி என்று வருவதைக் காணலாம்எனவே கடவுள் நம்பிக்கை உள்ள சைவ அல்லது இந்து பண்பாட்டில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் வடமொழி சார்ந்த நூல்களை எடுத்து இயம்புகின்றன.இவற்றை விட தமிழில் பூசை என்னும் போது திருமுறைகளில் வரும் வடமொழியையும் வடமொழி சார்ந்த நூல் கதைகளையும் விட்டால் தான்தமிழ் பூசையாகும் அவ்வாறு விட முடியாது ஏனெனில் சமய நூல்களை நாம் மாற்ற முடியாது.

தமிழில் பூசை வேணும் என்றாலும் வடமொழியையும் ஏற்றுத்தான் கொள்ள வேண்டும். உதாரணமாக மகாபாரதக் கதையாகிய அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்த விடயம் பற்றி அப்பர் சுவாமிகள் வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான் என்றும்,அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்தானை.அதேபோல் பார்க்கவ புராணம் கூறும் கஜமுக சம்காரம் அதாவது விநாயகர் கஜமுக அசுரனை சம்காரம் செய்த நிகழ்வை கைவேழ முகத்தானை படைத்தார் போலும் கயாசுரனை அவரால் கொல்வித்தார்போலும் எனப் பாடுகிறார் அவர் வடமொழிக் கதையை வெறுத்தாரா?மார்க்கண்டேயருக்காக எமனைக் காலால் உதைத்தது பற்றியும் அப்பர் பாடுகிறார் பாலனையோடவோடப் பயமெய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடுமக் காலனை வீடு செய்த கழல் போலும்.இச் சம்பவம் வடமொழி நூல்களில் உண்டு. மற்றது நஞ்சுண்ட வரலாறு ,அடிமுடி தேடிய வரலாறு என்பவை வடமொழிப் புராணங்கள் பலவற்றில்

உண்டு. இவை பற்றி கூறாத நாயன்மார்களே இல்லை ஏனெனில் இறை அருளால் வடமொழி மேன்மை திருமுறைகளில் பதியப்பட்டுள்ளது.

ஆலந்தானுகந்து அமுது செய்தானை ,என சுந்தரரும் வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டு என்று தொடக்கி துடங் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காட்டு மேவினாரே என்கிறார்அப்பர் சுவாமிகள் மாலறியா நான்முகனும் காணா மலையினை என்றார் மணிவாசகர் சிவபிரான் கங்கையை சடையில் வைத்தது தக்கன் யாகத்தை அழித்ததுஇவ்வாறு ராமாயண பாத்திரத்தில் உள்ள ராவணன் பற்றி பல இடங்களில் சம்பந்தசுவாமிகள் கூறுகிறார் வடமொழிப் புராணம் திருமுறைகளில் நிறைய உண்டு. ஏறத்தாழ ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட இடங்களில் வடமொழி வரலாறு உண்டு. நாயன்மார்களே ஏற்கும் போது நாம் வெறுக்கலாமா?சில தமிழ்ப் பிரியர்கள் அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு என்று சுந்தரமூர்த்தி சுவாமிக்கு இறைவன் சொன்ன வார்த்தையை பாவிக்கிறார்கள் அது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு மட்டும் பொருந்தும், எம்போல் சாதாரணமானவர்கள் ஆகமங்களில் கூறப்பட்ட சரியை கிரியை மார்க்கத்தில் மட்டும் வழிபட வேண்டும்,

நாயன்மார்கள் இன்தமிழ் பாடி இறந்தவர்களை எழுப்பினார்கள் உண்மை. அப்படியாயின் வடமொழி நூல்களில் கூட்டம் கூட்டமாக பலரை எழுப்பிய வரலாறுகளை ஏன் நம்ப மறுக்கிறோம்.? இதிலிருந்து அற்புதம் செய்த சான்றோர்களை நாம் போற்றுவோம். நாங்கள் அற்புதம் செய்யும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பதை உணர்வோம்.

தமிழ்க்கடவுள் என்று நாம் போற்றும் முருகனுடைய கந்தசஷ்டி சூரன் போர் என்பன வடமொழி ஸ்கந்த புராணம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முருகன் அருள் பெற்ற குமர குருபரர் அருணகிரிநாதர் என்பவர்கள் பாடலில் வடமொழியும் புராண இதிகாசங்களும் எவ்வளவு உண்டு..முருகன் தமிழ்க்கடவுள் என்று நமது எண்ணப்படி வைத்தாலும்வடமொழியைப் ஏன்பாட வைத்தார் என்றால் சைவ சமயத்திற்கு வடமொழி அவசியம் வேண்டும் என்பதால் ஆகும்.

உதாரணம் முதல் பாடலாகிய முத்தைத்திரு பத்தி திருநகை என்ற திருப்புகழில் வடமொழிச் சொற்கள் வீறு கொண்டுள்ளன**.*.பத்து தலை தத்த கணைதொடு என்ற ராமாயணமும் பத்தர்க்கிரதத்தை கடவிய என்ற பாரதமும் (வடமொழி வரலாறு) வந்துள்ளன. இதை விட கந்தர் அநுபூதி கந்தர் அலங்காரம் அடுத்து தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஸ்டி கவசம்குமர குருபரர் அருளிய கந்தர் கலி வெண்பா..இவை எல்லாம் வடமொழியைப் போற்றும் நூல்கள்மட்டுமன்றி வடமொழிச் சொற்களை தாங்கி வரும் அருட் பாடல்களுமாகும் என்று பல தமிழ் அறிஞர்கள் அறிவார்கள்.

எனவே சமஸ்கிருதம் சைவசமயத்திற்கு அல்லது இந்து சமயத்திற்கு அவசியம் உயிர் நாடி போன்றது. எனவே திருமுறையைப் போற்றுபவர்கள் வேதங்கள்உபநிடதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களையும் போற்ற வேண்டும் என்பதால் எல்லா சைவத் தமிழ் நூலக்ளிலும் சமஸ்கிருதம் கலந்து வந்துள்ளன.எனவே இவை எமது சைவத்திற்கு இரட்டைப் பிறவிகள் என்று நாம் என்னலாமே. இவை இறை வாக்கு. சமஸ்கிருதம் புரியாத மொழியில்லை என்பதைப் புரிவோம்.

எல்லோரும் போற்றும் பெரியபுராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள் முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணத்தில் எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து என்னும் பாடலில் முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராமுனிவர் என ஆதிசைவர் பற்றியும் தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம் வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தோண்டின் விரும்பி அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம் புகழும் பெற்றியதோ என வழி வழி வரும் குலம் பற்றியும் சிவ வேதியர்க்கும் உண்டான தொடர்பையும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பாடலில் அண்ணலை எண்ணியகாலம் மூன்றும் அர்ச்சிக்கும் மறையோர் எனவும் போற்றுவதைப் போற்றுவோம் ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே. சமஸ்கிருதம் இறந்த மொழியில்லை, ஆன்மீக வாழ்விற்கு சிறந்த மொழி.

இறை வாயில் பிறந்த மொழி. பல ஞானிகளால் ஆன்மீக வாழ்வில் புகுந்த மொழி. அருளாளர்களால் தமிழிலும் கலந்த மொழி. இன்றும் திருமுறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறதல்லவா? இன்னும் சொல்லப் போனால் சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் தமிழால் சமஸ்கிருதமும் சமஸ்கிருதத்தால் தமிழும் இணைந்து வளம்படுத்துகின்றன.

எனவே வடமொழியை ஆலயங்களில் இருந்து கலைக்க வேண்டாம் மரபுகளை குலைக்க வேண்டாம் நிலைக்க பாடுபடுவோம் தழைக்க ஈடுபடுவோம். ஒழிக்க முயற்சியாதீர்கள் பழிக்க விடாதீர்கள் செழிக்க விடுங்கள்.

வடமொழியும் தென்மொழியும் இறைமொழியே எனத்திடமாக போற்றுவது எம் வழியே. சைவர்கள் எல்லாம் தமிழரும் இல்லை தமிழர் எல்லாம் சைவரும் இல்லை என்பதை உணர்வோம். ஆகவே சைவத் தமிழருக்கு வடமொழி தென்மொழி இரண்டும் அவசியம். இருமொழி சார்ந்த நூல்களையும் போற்றுவோம்.

தமிழ் சார்ந்த நூல்களில் சைவ அல்லது தெய்வம் சாராத நூல்களும் உண்டு ஆனால் வடமொழி நூல்கள் எல்லாம் தெய்வம் சார்ந்த நூல்கள் என்ற சிறப்பும் உண்டு. வடமொழி தென்மொழி இரண்டாலும் இரண்டுபடாமல் ஒன்றுபடுவோம்.