Sunday, 24 January 2021

இந்து பெயர் உருவான விதம்

 #இந்து என்ற பெயர் எப்போது வந்தது? தொல்லியல் மற்றும் #தமிழ் இலக்கியங்களின் பார்வை என்ன?


ஹிந்து (இந்து) என்ற வார்த்தையே 200 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் ஜோன்ஸ் தான் தந்தார் என்று இங்கு பரவலாக பேசி வருகின்றனர். இதை சில இந்துத்துவவாதிகளும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உண்மையா? தொடர்ந்து படியுங்கள்...!


பாரத மக்களை #இந்துக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே  இருந்தது. இதற்கு சான்றாக காலத்தால் முந்தைய #கல்வெட்டு இன்றிலிருந்து  2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது...!


ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/DNa_inscription


இதுதான் இன்று நமக்கு கிடைக்கும் காலத்தால் முந்தைய #இந்து என்ற சொல்லாடலுக்கு #தொல்லியல் சான்று. இது தவிர்த்து இதற்கு வேறு என்னென்ன சான்றுகள் உள்ளன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்....!


அடுத்ததாக இஸ்லாமிய அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான #தாரிக்_அல்_ஹிந்த் எனும் நூலில் முக்கியமாக இந்நூல் எழுதப்பட்ட காலமான 1030 களில் இந்தியாவில் இருந்த தத்துவ மரபிற்கு அவர் #ஹிந்து என்று பெயரிட்டு எழுதி உள்ளார். அதாகப்பட்டது 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்....!


அதோடு கி பி 5 ஆம் நுற்றாண்டில் #பூலாங்குறிச்சி  தமிழ்(வட்டெழுத்து) கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது. அநேகமாய் இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் #கல்வெட்டும் பதிவாக இருக்கும். என்றாலும் இதை ஏற்பதில் பல குளறுபடிகள் உண்டு. ஏனென்றால்  இதை பிரித்து எழுதியதை தவறாக புரிந்துகொண்டனர் என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆக இதை சற்று ஒதுக்கி வைக்கலாம்...!


#ஆதாரம் ;


http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm


ஹிந்து" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று #சிவபெருமான் அருளிய விளக்கமாக நண்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் பதிவு செய்ததாவது👇👇


"ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து"


அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே " ஹிந்து. "


 #ஆதாரம் : மேரு தந்த்ரம்  

(31 வது அத்யாயம் )


இதை தவிர " ஹிந்து " என்ற சொல் காளிகா புராணம், பவிஷ்ய புராணம், ப்ருஹந்நாரதீய புராணம், குலார்ணவ தந்த்ரம்  முதலிய பழமையான நூல்களில் "ஹிந்து" என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரித்ர ஆய்வாளர்கள் மேரு தந்த்ரம்  என்ற நூலின் காலமாக எட்டாம் நூற்றாண்டை சார்ந்த நூல் என்று கூறுகிறார்கள்....!


அதோடு தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது #விஜய_நகர_சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில்,

“#ஹிந்து_ராய_ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது......! 


ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் #ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த #ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “#ஹிந்துஸ்தான்_பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் #சத்ரபதி_சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது.....!


”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் #கவிராஜ_பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே #ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது......!


#பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது. ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன....!


மிக முக்கியமாக #பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை #இந்து_ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார்....!


“இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “#இந்துஞானிகள்” என்றார்..!


 (இது ஜடாயு அவர்கள் எழுதிய தமிழ் ஹிந்து எனும் தளத்திலிருந்து.)


வடமொழியில் எழுதப்பட்ட #பிரகாஸ்பதி_ஆகமத்தில் (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .

தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே" என்ற வரிகள் உண்டு.


அதாவது “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது....!


அடுத்து #புத்த_ஸ்ம்ருதி (கி.மு. 4ம் நூற்றாண்டு)


"ஹிம்ஸாயா தூயதே  யஷ்ச ஸதாசரண தத்பர:

வேத, கோ, ப்ரதிமா  ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"


“ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து என்கிறது”.....!


மேலும், கிறிஸ்தவ மத நூலான பைபிள்  பழைய ஏற்பாட்டில் பாரதத்தை #இந்து_தேசம் என்று சுட்டும் குறிப்புகள் உள்ளது .....!


"இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள" 


#பைபிள்_பழைய_ஏற்பாடு_எஸ்தர் : 1-1


ஆதாரம் : https://www.bible.com/ta/bible/339/EST.1.1-4.TAMILOV-BSI


இது மட்டுமில்லாது தமிழ் #இலக்கியங்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு. ஆனால் இது இடத்தையோ மதத்தையோ குறிக்க பயன்படுத்தப்படாமல் மரபை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ,


கி. பி 12 ஆம் நுற்றாண்டு #ஒட்டக்கூத்தர் இயற்றிய #குலோத்துங்க_சோழன்_உலாவில், குலோத்துங்க சோழனை "பொன் துவரை மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ” 


பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள்....!


இங்கு இந்து என்ற சொல்லாடல் #சந்திர_மரபு என்ற பதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது...!


இது மட்டுமல்லாது இதே பதத்தில் #திருமந்திரம், #தேவாரம், #திருவாசகம், #கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு....!


ஆக தமிழ் இலக்கியங்களிலேயே இந்து என்ற சொல்லாடல் பயின்று வந்துள்ளதால் ஆங்கிலேயன் தான் இந்து என்று பெயரிட்டான் என்ற கூற்று #ஒவ்வாததாகிறது. இவ்வாறு, பொ.மு 500 தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது  இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு பரவி இருந்தது என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறியலாம்....!


Sunday, 10 January 2021

 _*ஹிந்து சகோதரர்களே*_ _பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._ _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._ _மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_ _ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ _நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_ _ஆகையால் உங்களால் முடிந்த பங்களிப்பு_ _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_ _நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._ _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_ _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_ _தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ _*ஜெய் ஸ்ரீ ராம்*_ https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

ராமர் கோவில் கட்ட நிதி தாருங்கள்

 _*ஹிந்து சகோதரர்களே*_


_பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைச் சின்னம் அகற்றப்பட்டு.._


 _தற்போது நம்முடைய வாழ்நாளில் நம் கண் முன்னரே.._


_மீண்டும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமபிரான் ஆலயத்திற்கு_


_ஒவ்வொரு ஹிந்துவும் நீங்களாகவே முன்வந்து_ 


_நம்முடைய பங்களிப்பும் அந்தக் கோவில் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்_


 _ஆகையால் உங்களால் முடிந்த  பங்களிப்பு_


 _1 ரூபாய் முதல்.... காணிக்கையாக அனுப்புங்கள்_


_நம் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு எவ்வாறு பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களுக்கு அழைப்புதல் கொடுப்போமோ..._


 _அதுபோல ஒவ்வொருவரும் நம் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும்_


 _இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்_


_தோள் கொடுங்கள்_ _பங்கு கொள்ளுங்கள்_ 


_*ஜெய் ஸ்ரீ ராம்*_



https://googleweblight.com/sp?hl=en-IN&u=https://srjbtkshetra.org/donate/

Thursday, 7 January 2021

பொங்கல் பண்டிகை இந்துகள் பண்டிகை அல்ல

 பொங்கல் தமிழர் பண்டிகை, இந்துகளுக்கு சொந்தமானது இல்லை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது என்று உருட்டுவானுங்க. 


ரிக்வேத காலத்தில் இயற்கையை தான் மக்கள் வணங்கினார்கள், அதே போல தான் தமிழர்களும் இயற்கையை வணங்கினார்கள். 


இயற்கைக்கு உயிர் கொடுத்து வந்தது தான் (நிலம், நீர், காற்று, ஆகாயம், சூரியன்)  நம்ம இந்து கடவுள்கள். ( எ-கா) 

👉 நிலம் - பூமிதாய் , 👉நீர் - வருண பகவான் , கங்கை, 

👉காற்று - வாயு பகவான் 

👉சூரியன் - சூரிய பகவான், அக்னி நாயகன், திரௌபதி, தீபமாக சிவன்(திருவண்ணாமலை) 


இப்படி தான் இந்திய கலாச்சாரம் மனித நாகரீகம் வளர வளர அவர்களின் நம்பிக்கையும் ஆழமான இறை நம்பிக்கையை நோக்கி நகர்ந்தது. 


கவனிக்கவும், 


முதல் நாள் பொங்கலுக்கு நாம சூரியனுக்கு படையலிட்டு வணங்குவோம்,

ஆனால் ஒரு சமுதாயத்தினர் ஒருவனை தவிர யாருக்கும் வணங்க மாட்டோம், அஞ்ச மாட்டோம் ,அவனை வணங்காதவர்கள் காபிர்கள் அவர்கள் மீது புனிதப் போர் நடத்துங்கள் என்கிறது, இன்னொரு குரூப் இயேசுவை தவிர்த்து மற்றதை வணங்கினால் அவர்கள் பாவிகள், அவர்களு நிச்சயம் நரகம் தான் என்கிறது. 


இவர்கள் தமிழர்களா? 


பொங்கலுக்கு இரண்டாம் நாள் மாட்டு பொங்கல்,  மாடுகளை தமிழர்கள் தெய்வங்களாக அன்று பூஜை செய்து வணங்குவார்கள், ஆனால்   நாங்க மாடு கறி தின்போம், அது என் உரிமை என்று மேலே சொன்ன இரண்டு குரூப்பும் கூடவே புரட்சி புளுத்திகள் போராட்டம் நடத்தினாங்க, இவங்க தான் தமிழர்களா? 


மறுபடியும் சொல்ரேன்  நம்மை சுற்றி பெரிய மாய வலை இருக்கு அதன் வலு தன்மை திக, திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற தீயசக்திகளை சார்ந்து இருக்கிறது. 


நீ பெரும்பான்மையாக இருக்கும்வரை மட்டுமே உன்னால் அந்த தெருவில் கூட நடமாட முடியும். உன்னை ஏமாற்ற நாம் தமிழர்கள் என்று கூவும் கூட்டம் தமிழ்மொழியில் கூட பெயர் வைக்காது, தமிழ் பாடம் படிப்பது ஹராம் என்று போராடும் கூட்டம் அது. உணர்ந்து உஷராகிடு.