Monday, 26 July 2021

ஈழம் ஜூலை கலவரம்

 கருப்பு ஜூலை : 02


அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.


தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.


அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.


ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.


தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.


வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?

ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.


கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.


உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"


உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.


மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.


இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.


நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.


இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.


போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை


ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.


புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.


இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.

சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.


ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?


ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.


அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.


ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.


1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.


வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.


ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.


ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.


அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.


அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.


ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கருணாநிதியும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌


"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"


கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.


அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.


சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.


அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.


மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை


இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.


இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்


அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"


அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.


அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.


பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.


சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது.


ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை


சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.


அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்


இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.


இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.


முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.


அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.


தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும், இனி அப்படி ஒரு காலம் வரவே வராது,


வரவும் கூடாது




Tuesday, 13 July 2021

ஈழ போரில் தமிழன் தோற்க என்ன காரணம்?

 சிங்களவன்....


புத்த மதம் ,

சிங்கள மொழி ...

என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ....

வென்றான்.....


ஆனால்..


தமிழன்.....


தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி....


தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி....


இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,


தமிழ் பேசி கொண்டே...

நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி...


மதம் மாற்றுவதற்காக

தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்...

புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..


தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி....


இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ...

தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...

எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது....

Monday, 12 July 2021

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம்...

 முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள்

நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம்

ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌

கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக..

புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற இலங்கை தமிழ் காவல் அதிகாரிகளுக்காக..

புலிகளின் வங்கி, அடகுகடை முயற்சியில் கொல்லபட்ட தமிழர்களுக்காக‌

வெடிகுண்டு சோதனைகளில் புலிகளால் கொல்லபட்ட தமிழருக்காக‌

புலிகளால் கொல்லபட்ட ராஜினி முதல் ஏராளமான சிந்தனைவாதி தமிழர்களுக்காக..

புலிகளின் கந்தன் கருணை இல்லத்தில் கொல்லபட்ட 80 தமிழ் போராளிகளுக்காக‌

புலிகளால் கொல்லபட்ட சபாரத்தினம் அவரின் படையில் இருந்த ஆயிரம் தமிழருக்காக, ஆமாம் ஆயிரம் தமிழர்கள் அன்று புலிகளாலே கொல்லபட்டனர்

புலிகளால் கொல்லபட்ட மாற்று இயக்க தமிழர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் அந்த தமிழருக்காக‌

புலிகளால் கொல்லபட்ட மெண்டிஸ் போன்ற போராளிகளுக்காக….

துணுக்காய் போன்ற புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்து கொல்லபட்ட ஏராளமான தமிழருக்காக..

ஈழ தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் என்ன உறவு? மொழி உறவாம். ஆனால் இலங்கை இஸ்லாமிய தமிழருக்கும் ஈழதமிழருக்கும் மொழி ஒன்றாயினும் உறவே இல்லையாம், அந்த புலிகளால் மசூதியில் கொல்லபட்ட 200 இஸ்லாமிய தமிழருக்காக‌

புலிகளால் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபாவிற்காக, அவரோடு செத்த 14 தமிழருக்காக, அப்பொழுது சிவராசனால் கொல்லபட்ட ஒரு தமிழக காவலுனுக்காக‌

கொழும்பில் கொல்லபட்ட அமிர்தலிங்கம் எனும் தமிழ் தலைவனுக்காக. இன்னும் 2005 வரை கொல்லபட்ட லஷ்மன் கதிர்காகர் போன்ற தமிழருக்காக‌

ராஜிவ்காந்தியுடன் சென்னையில் கொல்லபட்ட 16 தமிழருக்காக‌

வஞ்சகமாக பேரரிவாளனையும், நளினியினையும் சிக்க வைத்துவிட்டு இறுதிவரை வாய்திறக்காத புலிகளின் வஞ்சகத்திற்காக, கிட்டதட்ட இதுவும் கொலையே

புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா என்பவரை 500 தமிழர்களுடன் சுட்டு கொன்றார்கள் அல்லவா? அந்த கொலைகளுக்காக‌

கருணா பிரிவு போராளிகள் 400 பேரை வெருகல்லில் கொன்ற கொலைக்காக‌

பள்ளி தமிழ் சிறுவர் சிறுமியரை பிடித்து அவர்களை போர்முனைக்கு அனுப்பி கொன்றார்கள் அல்லவா? அந்த அழிவிற்காக‌

3 தமிழ் தலைமுறை கல்வி, வாழ்வு என சகலமும் புலிகளால் அழிந்திருக்கின்றதல்லவா அதற்காக ….

2009ல் மக்களை விடுங்கள் என உலக நாடுகள் கேட்டும் சுட்டிம் அடித்தும் தங்களோடு வைத்திருந்தார்கள் அல்லவா? அந்த கொடூரத்திற்காக‌

அந்த தமிழர்களை எல்லாம் நினைத்து அழுகின்றோம்

பிரபாகரனுக்கு தன் குண்டுதுளைக்காத பிரத்யோக சட்டையினையும், கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிய ராஜிவ் காந்தி

முதலில் பிரபாகரனை நம்பி, பின் இவர் மக்கள் போராளியே அல்ல என முதலில் சொன்ன ராஜிவ்காந்தி சொன்னதும், பின்னாளில் பிரபாகரனுடன் பேசிவிட்டு அலறி அடித்து ஓடிய
நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் சொன்னதும் தான் மகா உண்மை

“பிரபாகரன் தன் உயிருக்கு அஞ்சுகின்றார், துப்பாக்கியினை கீழே வைத்தால் மறுநிமிடம் கொல்லபடுவோம் என சந்தேகிக்கின்றார்

அந்த பயம் இருக்கும் வரை அவர் எதனைபற்றியும், யாரைபற்றியும் கவலைபட மாட்டார், அவர் இருக்கும் வரை அழிவுகள் தொடர்ந்தே இருக்கும்”

இறுதியாக அதுதான் பலித்தது, அந்த அழிவு பல்லாயிர கணக்கான மக்களோடு நிகழ்ந்ததுதான் சோகம்

கொழும்பிலும், வடமராச்சியிலும் களம்புகுந்து தன் கையினை சுட்டுகொண்ட இந்தியா அதன் பின் ஒதுங்கியது, அதாவது ஆரம்பத்திலே இந்திய தலையீடு இல்லையென்றால் 1980களிலே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை, 2009 வரை நீடித்திருக்காது

2009 வரை பிரபாகரன் வாழ ஒரே காரணம் இந்தியா, ராமன் ராவணனுக்கு கொடுத்தது போல, கண்ணன் துரியோதனனுக்கு கொடுத்தது போல பல வாய்ப்புகளை இந்தியா கொடுத்தும் புலிகள் ஏற்கவே இல்லை

சிங்கள தளபதி சொன்னது போல “இந்திரா, ராஜிவ் தலையீடு மட்டும் இல்லையென்றால் 1980களிலே எமது நாடு அமைதியாயிருக்கும், 2009 வரை இழுத்த காரணமே இந்தியாதான்”

எல்லாம் முடிந்துவிட்டது

பலர் புலிகள், முள்ளிவாய்க்கால் என அழுது இந்தியாவிற்கும், கலைஞருக்கும், காங்கிரசுக்கும் சாபமிடட்டும்

காரணமில்லா சாபம் பலிப்பதில்லை

இப்படியாக தமிழர்களை கொன்று, தமிழ் போராளிகளை கொன்று, தமிழ் தலைவர்களை கொன்று, சிங்களன் கொலை முயற்சியில் தப்பிய ராஜிவ்காந்தியினை கொன்ற புலிகள், உண்மையில் யாருக்கு உபயோகமான காரியம் செய்திருக்கின்றார்கள்?

சாட்சாத் சிங்களனுக்கு,, இந்த காரியங்களால் அவனுக்குத்தான் பெருத்த இலாபம். இதனால்தான் அவனால் வெல்ல முடிந்தது

ஆக புலிகள் போராடிய பலன் இதுதான், சிங்களனுக்கு சார்பாகத்தான் அனைத்து கொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்கள்

புலிகள் காரணமின்றி ஒருவித மூர்க்கத்தில் நிகழ்த்திய இக்கொலைகள்தான், சிங்களனுக்கு வெற்றியினை கொடுத்தன, தமிழருக்கு முள்ளிவாய்க்காலை காட்டின‌

உறுதியாக சொல்லலாம், 1970 முதல் 21990 வரை ஈழத்தில் எழும்பிய மிக உணர்ச்சியான கொதிநிலையிலான மக்கள் எழுச்சியினை அடக்கி, சிங்களனிற்கு உதவியாக இருந்தை அன்றி புலிகள் ஒன்றும் செய்துவிடவில்லை

ஆழநோக்கினால் அதுதான் புரியும்

தமிழ்போராட்டம் தமிழர்களை கொன்ற விசித்திரத்தையும், அதனை தடுக்க முடியாத நம் நிலையினையும் நினைத்து நினைத்து அழலாம்…

நாம் மேற்கண்ட தமிழருக்காக அழலாம், புலிகளால் கொல்லபட்ட சிறுபகுதி தமிழர்கள் நிலைதான் சொல்லபட்டிருக்கின்றது, இன்னும் ஆயிரகணக்கான பட்டியல் உண்டு

அது முள்ளிவாய்க்கால் பட்டியலை விட கொடூரமானது..

முறிந்த பனை புத்தகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 முறிந்த பனை புத்தகம்  இங்கே கிளிக் செய்யவும்

Sunday, 11 July 2021

இந்து மதம் பெயர் காரணம்

 இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம்

இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன?

அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை

அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது

இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை சனதான‌ தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர்

பிரிவுகள் இருந்ததே தவிர மூல கொள்கையில் வழிபாட்டில் சிக்கலே இல்லை

அப்பக்கம் அதாவது சிந்து நதிக்கு அப்பக்கம் இருந்தவர்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்கு இவர்களை எப்படி அழைப்பது என சிக்கல் வந்தது

சிந்துநதிக்கு அப்பக்கம் இருப்பது (இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சி என்பது அவர்களுக்கு ஹி என மாறும், அப்படித்தான் சிந்து இந்துநதி ஆனது, கிரேக்கர் அதை இன்டஸ் என்றே அழைத்தனர்

(சில எழுத்துக்கள் அப்படி மாறும், ஜெருசலேம் இங்கு எருசலேம் ஆகும், யாழ்பாணம் ஜாப்னா ஆகும் , அப்படித்தான் சிந்து என்பது இந்து ஆனது, சிந்து மலை, சிவ மலை என்பதெலாம் இந்துகுஷ் மலை, இமயமலை என்றானது)

ஹிந்தஸ், இந்து , இந்தியா என்றானது இப்படித்தான்

அதாவது இந்து என்பது அந்நியர் சூட்டிய பெயர், அது நிலைத்துவிட்டது

உலகில் யார் தனக்கு சொந்த பெயர் சூட்டினார்கள்? எல்லா பெயர்களும் இன்னொருவரால் சூட்டபடுபவையே

சொந்தமாக பெயர் சூட்டுவதும், தனக்குதானே பட்டமளிப்பதும் திராவிட கட்சிகளின் கலாச்சாரம்

இங்கிருக்கும் நிலபரப்பும் அதில் வாழ்ந்த கலாச்சாரமும் இந்து எனும் பெயர் அன்னியனாலே அழைக்கபட்டது

இங்கு சைவம் வைணவம் என பல பிரிவுகளாக இருந்ததது, அந்நியர் மொத்தமாக இந்து என்றார்கள்

அதற்காக இந்து என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அப்படி ஒரு மதமே இல்லை என்றால் எப்படி?

இதற்கெல்லாம் நன்றாக கேள்வி கேட்பவர்களின் காதை பிடித்து திருகி நாமும் கேட்டிருகின்றோம்

இந்த திராவிடம் என்பது எங்கே உண்டு? எந்த பண்டை இலக்கியங்களில் உண்டு

அட தமிழ்நாடு என்பதே எங்கே உண்டு? தமிழ் கூறும் நல்லுலகம் என சொன்னதே அன்றி தனி தமிழ்நாடு என எந்த இலக்கியம் சொல்லிற்று?

இங்கே சேர சோழ பாண்டி மன்னன், கடையேழு வள்ளல் நாடு என ஏகபட்ட நாடுகள் இருந்திருக்கின்றன‌

என்று இது திராவிட நாடு? தனிதமிழ் நாடு என இருந்தது?

இதை எல்லாம் கேட்டால் பதில் வராது, வரவே வராது

இந்து எனும் வார்த்தை அந்நியனால் இங்கிருக்கும் மதத்திற்கு சூட்டபட்டது, பல பிரிவுகளை கொண்ட மதம் ஒரே வார்த்தையில் அறிய அப்படி அழைக்கபட்டது

ஆனால் திராவிடம் என பெயர் சூட்டியவன் யார்? அதன் நோக்கம் என்ன? அப்பெயரால் இங்கு செய்யபடும் அரசியலுக்கு யார் மூலம் என்பதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

அது முழுக்க தெரிந்தாலும் தெரியாதவர் போல் இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

தொன்மை வாய்ந்த இந்துக்களுக்கு பல அடையாளம் உண்டு, உலகெல்லாம் உண்டு.

தொன்மை வாய்ந்த திராவிட அடையாளம் என ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்

Friday, 2 July 2021

 நெல்லை பக்கம் என்ன தகறாறு?

அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்

கன்னியாகுமரியில் நடப்பதென்ன?

பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது

சாத்தூர் விருதுநகர் பக்கம்?

மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்

அந்த கமுதி பக்கம்?

இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி

விழுப்புரம் பக்கம்?

அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில விஷ்யங்களை சொல்லும்

ஈரோட்டு பக்கம்?

அதெல்லாம் கொங்குநாடு, யுவராஜ் கவுண்டரின் வீரம் உலகறிந்தது

சேலம் தர்மபுரி?

பாமாக காலூன்றி இருக்கும் இடம் என்பதால் சொல்ல ஒன்றுமில்லை

திருச்சி பக்கம்?

அண்ணே அதெல்லாம் முத்தரையர் ஏரியா

தேனி ஆண்டிபட்டி பக்கம்

அய்யோ அதெல்லாம் தேவரய்யாவ கும்பிடுற பூமி

தஞ்சாவூர் பக்கம்?

கீழவெண்மணி முதல் ஏராளம்

ஆக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு சாதி இன்னொரு சாதியுடன் மோதல், கொலை கலவரம்.

ஆமாண்ணே

இது போக நாயுடு ஏரியா, நாயக்கர் ஏரியா?

கண்டிப்பாண்ணே

இதில் பிராமணன் எங்கு எந்த சாதியினை அடித்தான்? யாரை கொளுத்தி கொன்றான்

அண்ணே சாதிவெறி பிராமணர் ஒழிக, அவனுகதான் எல்லாவற்றிற்கும் காரணம்

டேய் வெட்டிட்டு சாகிறது இவனுக? அவங்க எப்படி?

அவங்கதான் சாதியை உண்டாக்கி வெட்ட சொன்னாங்க‌

எங்க சொன்னாங்க? அவங்க சொன்னா நீங்க ஏண்டா வெட்டுறீங்க?

இல்லண்ணே அவனுகதான் உண்டாக்கினது, இப்ப தொடருது, விடமுடியாதுண்ணே

அடேய் அவனுகளே வேண்டாம்னா அந்த சாதியும் உங்களுக்கு வேண்டாம்ல, தூற எறிஞ்சிட்டு அமைதியா வாழுங்கடா

அதெல்லாம் முடியாது. அவன் அன்னைக்கு சொன்னதாலதான் வெட்டிட்டு சாகுறோம்

டேய் சாதிவெறி இருக்கிறது உங்களுக்கா பிராமணனுக்கா

ஹிஹிஹி சத்தியமா எங்களுக்குத்தான்.

நில்லுடா இதுக்கு பதில் சொல்லு

கிரானைட் கொள்ளை அடிச்சது பிராமணனா?

இல்ல‌

தாதுமணலை சுரண்டுனது பிராமணனா?

இல்ல‌

ஆற்றுமணலை விற்றுகொண்டிருப்பது பிராமணனா?

இல்ல

இந்த கட்டபஞ்சாயத்து கூலிப்படை எல்லாம் பிராமணனாடா?

இல்ல‌

தமிழ்நாட்டில் பிராமணர் தொழிற்சாலை எவ்வளவு?

தெரியாதுண்ணே, நிறைய இல்லை

பிராமணர் நடத்தும் மது ஆலை?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பொறியியல் , மருத்துவ கல்லூரி?

அதுவும் ஒண்ணு கூட இல்லண்ணே

பிராமணர் நடத்துன் நிகர்நிலை பல்கலைகழகம்?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பிரமாண்ட மருத்துவமனை?

அதுவும் இல்லண்ணே?

பிராமணர் டிவி?

அதுவும் இல்லண்ணே

தமிழ்நாட்டு நகைகடை, ஜவுளிகடை, டிப்பார்மெண்டல் ஸ்டோர், ஹோட்டல், உணவகம், வட்டிகடை என எல்லா தொழிலிலும் பிராமணனுக்கு எவ்வளவுடா இருக்கு?

தெரியலண்ணே

டேய் சென்னையில எவ்வளவு பிராமணனுக்கு பிரமாண்ட கடை இருக்கு சொல்லு

சொல்ல தெரியலண்ணே, ஒண்ணும் இருக்குற மாதிரி தெரியல‌

தமிழ்நாட்டில் எத்தனை பிராமண எம்பி இருக்கான்?

தெரியலண்ணே

பிராமண எம்.எல்.ஏ?

அதுவும் தெரியலண்ணே..

தமிழ்நாட்டில் ஏதும் பிராமண அமைச்சர்?

அப்படியும் தெரியலண்ணே

தொழிற்சாலை, கல்வி நிலையம், மண் திருட்டு, மலை திருட்டு, வெடி தொழிற்சாலை, மருத்துவமனை என ஒன்று கூட அவர்களை சொல்லமுடியாது, ஆனால் பிராமணன் ஆண்டான், சுரண்டினான், முன்னேற விடமாட்டான் என சொல்லிகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே?

அட போங்கண்ணே இது பெரியார் மண்ணுண்ணே

அதான்டா பிராமணன காட்டி காட்டி நல்லா சம்பாதிச்சி செட்டில் ஆனது யாருடா?

இருங்கண்ணே விசாரிச்சிட்டு வாரேன்

என்ன விசாரிக்க போறே?

நீங்க ஏதோ ஒரு பிராமணன்கிட்ட லம்பா ஒரு தொகை அடிச்சிட்டீங்க, அத விசாரிச்சிட்டு வாரேன்”